(UTV | கொழும்பு) –
தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம். மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயற்பட்டு வருகிறார்வருகிறார் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் 46 இடங்களில் மத்திய அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ நடைபெற்றது. இது போல் கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அவர், தபால் துறை, வங்கி மற்றும் இந்திய உணவுக் கழகம் உள்ளிட்ட துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 156 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமரின் ரோஜ்கர் மேளா மூலம் ஆண்டுக்கு 10 இலட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை தருவதாக அறிவித்தது. அதன்படி 8-வது ரோஜ்கர் மேளாவில் இதுவரை 8.5 இலட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கியுள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டு அதன் பயனாக ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டு நாட்டின் உள்கட்ட மைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பிடிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் சார்பில் மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்டு வருகிறோம்.மீனவர்கள் நலனில் அதிக அக்கறையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.
மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தையே பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு படகுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්