(UTV | கொழும்பு) –
இலங்கையின் முதலாவது முஸ்லிம்களின் பூர்வீக நூதசாலையான காத்தான்குடி இஸ்லாமிய பூர்வீக நூதனசாலை கடந்த 20 நாட்களாக திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று -26- புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி தெரிவித்தார்.
முஸ்லிம்களுடைய வரலாற்று பாரம்பரியங்களையூம் வரலாற்றுச் சான்றுகளையும் காட்சி பொருளாகக் கொண்டு காத்தான்குடியில் இயங்கி வருகின்ற பூர்வீக நூதன சாலை இம்மாத ஆரம்பத்தில் திருத்த பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. இதனால் நாடெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதற்காக அவர்களிடத்தில் வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் காத்தான்குடி நகர சபை செயலாளர் இன்று மாலை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்
கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இருந்த எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா திறந்து வைக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு குறித்த பூர்வீக நூதன சாலை காத்தான்குடி நகர சபையிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் மீண்டும் குறித்த நூதன சாலையை வழமை போன்று சகல பொது மக்கள் பார்வையிட முடியும் எனவும் காத்தான்குடி நகர சபை தெரிவித்துள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්