உள்நாடு

நிதி வலயமாக மாறும் கொழும்பு துறைமுக நகரம்!

(UTV | கொழும்பு) –

கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளுடன் கொழும்பு துறைமுக நகரத்தை ‘நிதி வலயமாக’ மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய சட்டம் துறைமுக நகரத்தை ‘கொழும்பு நிதி வலயமாக’ மாற்றும் என்பதுடன், அதற்கு கடல்சார் நடவடிக்கைகளுக்கான அதிகார வரம்பை வழங்கும். இது தொடர்பான புதிய சட்டம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமுல்படுத்தப்படும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அநுர தரப்பு இன்றைய சந்திப்பில் பங்கு கொள்ளாது

கொரோனாவிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்தனர்

மழையுடன் கூடிய காலநிலை