உள்நாடு

தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரிய கடிதத்தை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி கட்சியின் தலைவர் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர சமர்ப்பித்த முறைப்பாட்டை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தயாசிறி ஜயசேகரவுக்கு அவ்வாறானதொரு கடிதத்தை வழங்குவதற்கு கட்சியின் மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் வியாழக்கிழமை விவாதத்திற்கு

மாணவர்களை அழைத்து வர நேபாளம் நோக்கி யு.எல் 1424 எனும் விஷேட விமானம்

அரசு வைத்தியசாலைகளில் பணம் செலுத்தி மருந்துகளை வாங்கலாம்