உள்நாடு

பாடசாலை சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம்!

(UTV | கொழும்பு) –

குறிப்பிட்ட சிலருக்கே பாடசாலை சீருடை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடசாலை பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கையளிக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
சகல பாடத்திட்டங்களையும் உள்ளடக்கி மீளமைக்கவும், இந்த சகல பௌதீக வசதிகளை வழங்குவதுமே நமது எதிர்பார்ப்பு ஆகும்.
இதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் காலதாமதமாக இருந்த பாடப்புத்தகங்களை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் அச்சிடுவதன் மூலம் இந்த வருடம் 4,000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் சேமிக்க முடிந்துள்ளது. அரச அச்சக சட்டப்பூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் அடையும் நிலையை எட்டியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அனைத்து பாடசாலை பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய அரசாங்க ஆவணங்கள் அச்சிடுவதற்கு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அதனை மேலும் அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், நம்பகத்தன்மை மற்றும் தரநிலை என்பன இந்த அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் பாடசாலை அமைப்பில் மாற்றத்தை யதார்த்தமாக்குவதற்கு இன்றியமையாத காரணியாகும்” என தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவம் – கைதான இலங்கையர்கள்.