(UTV | கொழும்பு) –
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தினை அடிப்படையாக வைத்து புதிய சட்டநடவடிக்கை எதனையும் முன்னெடுக்கும் நோக்கம் இல்லை என கிறிஸ்தவ திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார். எனினும் இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து புதிய வெளிப்படையான விசாரணைகள் குறித்து உறுதியாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 வெளியிட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் குறித்து புதிய சட்டநடவடிக்கையில் ஈடுபடும் எண்ணம் ஏதாவது உள்ளதா என்ற மோர்னிங்கின் கேள்விக்கு பதிலளித்துள்ள சிறில்பெர்ணான்டோ குறிப்பிட்ட ஆவணப்படத்தில் குற்றச்சாட்டுகள் மாத்திரம் காணப்படுவதால் அவை சட்டரீதியாக ஆதாரமற்றவை என்பதால் புதிய சட்டநடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடும் எண்ணமில்லை என சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆவணப்படத்தை அடிப்படையாக வைத்து நாங்கள் சட்டநடவடிக்கையில் ஈடுபடவிரும்பவில்லை அதில் சட்டரீதியான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மாத்திரம் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் இந்த விடயம் குறத்து புதிய விசாரணையையே நாங்கள் கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விசாரணை பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும் தாக்குதலை மேற்கொண்ட தனிநபர்கள் அவர்களிற்கு உதவியவர்கள் தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட அனைத்து விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්