(UTV | கொழும்பு) –
சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தவேளை விக்டோரியா நூலண்ட் இது குறித்த அமெரிக்காவின் கரிசனையை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நடுநிலை நாடு என்ற வகையில் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கைக்குள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் நிலையான செயற்பாட்டு முறையொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுடனும் ஒரேமாதிரியான அணுகுமுறையையே இலங்கை பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள வெளிவிவகார இவ்வாறான நடைமுறையிலிருந்து சீனாவை மாத்திரம் விலக்கிவைக்கமுடியாது எனவும்தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்கூட்டத்தொடரிற்காக அமெரிக்கா சென்றுள்ள அலி சப்ரி அங்கு விக்டோரியா நுலண்டை சந்தித்துள்ளார்.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්