(UTV | கொழும்பு) –
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை ஓய்வூதியத்துடன் 50,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் சமீபத்திய கோட்பாடு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பிரேரணை அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் உகஸ்ட் 28ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது அங்கீகரிக்கப்பட்டது. அரசியலமைப்பின் பிரிவு 153(2) இன் படி, கணக்காய்வாளர் நாயகம் மேலே குறிப்பிட்டுள்ள ஓய்வூதிய உரிமைக்கான கொடுப்பனவை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்த வேண்டும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්