(UTV | கொழும்பு) –
நாட்டில் பல மாதங்களாக நடக்கும் போர் பிராந்தியத்தில் பரவக்கூடும் என்பதனால் துணை இராணுவப் படைகள் மீது சர்வதேச அழுத்தம் கொடுக்க வேண்டும் என சூடானின் இராணுவத் தளபதி ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சமூகம் குறித்த துணை இராணுவ விரைவு ஆதரவுப் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்றும் சூடானின் எல்லைகளுக்கு வெளியே அதன் ஆதரவாளர்களைக் குறிவைக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் போரின் ஆபத்து இப்போது பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சூடானின் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் அந்த கிளர்ச்சியாளர்கள் பிராந்தியம் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத மற்றும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவை நாடியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්