(UTV | கொழும்பு) –
இனவாத தாக்குதல் மூலம் பயங்கரவாத தடை சட்டம் வெளிவரவுள்ளதாக திலீபன் நினைவேந்தல் ஊர்தி மீது நடத்தப்பட்ட மிலேச்ச தாக்குதலை கண்டித்து காணாமற்போனாரின் குடும்ப ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது.
காணாமற் போனாரின் குடும்ப ஒன்றியம் சார்பாக அசங்க அபேரத்ன வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
2023.09.15 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்து நடக்க இருப்பது தெளிவானது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்பை பொறுப்படுத்தாது அரசு இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து சட்டமாக நிரைவேற்றவுள்ளது.
இது போலவே 2023.09.17ம் திகதி திருகோணமலையில் திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கும், அதனோடு சென்ற தமிழ் மக்களுக்கும் சிங்கள காடையர் குழு மேற்கொண்ட தாக்குதல். இந்த மிலேச்ச தாக்குதலின் காட்சிகளை பார்க்கும்போது மிகவும் தெளிவானது, 2022 மே 09 காலிமுகத்திடல் போராட்டக் களத்தை தாக்தியது போல் காடையர் தாக்குதல் நடத்துவது பொலிஸ் உத்தியோகத்தர்களை முன்னிலையிலேயே. பொலிஸார் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தாக்குதலை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதனால் இத் தாக்குதல் நடப்பது எதாவதொரு அரசியல் அனுசரணையுடன் என்பது மிகவும் தெளிவானது. அதேபோல் கடந்த மே 18ம் திகதி யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூற கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியையும்,1983 கறுப்பு ஜுலைக்கு 40 வருடமாகும் போது அந்த இனப்படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போதும் சிவில் பிரஜைகள் சிலர் வந்து அதனை குழப்ப ஈடுபட்டனர். அங்கும் பொலிஸார் வலமைபோல் முறைகேடான செயலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுதுவதற்கு பதிலாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு அதனை பயன்படுத்திக்கொண்டார்கள். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுதல், திரகோணமலையில் திலீபன் நினைவேந்தல் ஊர்தியை தாக்குதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் எம்மை தெளிவுபெற வைப்பது என்ன? இவை திடீர், தனிமையான நிகழ்வுகள் அல்ல. மீண்டும் மீண்டும் இதுமாதிரியான செயல்கள் நடக்காமல் இருப்பதற்காக இதன் பின்னாலுள்ள இனவாதத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மீண்டும் நினைத்துப்பார்ப்பது சிறந்தது.
திலீபன் சாகும்வரை உண்னாவிரதத்தை ஆரம்பிப்பது இன்றைக்கு 36 வருடங்களுக்கு முன்பாக, அதாவது 1987 செப்டம்பர் 15. அன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக திலீபன் உண்னாவிரதத்தை ஆரம்பிக்கும் போது இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்டு மூன்று நாட்கள். ஒப்பந்தம் கைச்சித்திட இரு தினங்களுக்கு முன் திலீபன் 5 கோரிக்கைகளை தூதுவர் ஊடாக இந்திய அரசுக்கு முன்வைத்தார். ஜே. ஆர் இன் 6/5 அரசு செயல்படுத்திய 1979- 47ம் இலக்க பயங்கரவாதத்தை தடுக்கும் தற்காலிக சட்டமூலத்தை இல்லாமல் செய்யுமாறும், பலவந்தமாக தடுத்து வைத்துள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதும் அதில் பிரதான கோரிக்கையாகும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්