உள்நாடு

முட்டைகளை இறக்குமதி செய்வதில சிக்கல் – அஜித் குணசேகர.

(UTV | கொழும்பு) –

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள் தொடர்பில் கால்நடை உற்பத்தி , சுகாதார திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என அகில இலங்கை பண்ணைகள் சங்கத்தின் (AIPA) தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூர் சந்தையில் இயற்கை முட்டைகளைத் தவிர செயற்கை முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உள்ளூர் முட்டை உற்பத்தியை மக்கள் நம்பலாம், ஆனால் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளன. உள்ளூர் முட்டை உற்பத்தியில் இதுவரை இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை, ஆனால் செயற்கை முட்டைகள் குறித்து சமூகத்தில் மக்களிடையே பய உணர்வு ஒன்று எழுந்துள்ளது.

அத்தியாவசிய உணவுகளின் தரம் குறித்தும், நுகர்வோர் குறித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஒரு சங்கமாக நாங்கள் எப்போதும் கோருகிறோம். நுகர்வோர் உள்ளூர் உணவுப் பொருட்களைப் பயன்படுத்த மறுத்தால், அது உள்ளூர் பொருட்களின் மற்றொரு சரிவுக்கு வழிவகுக்கும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திலினி பிரியமாலி சிறைச்சாலை நீதிமன்றுக்கு

நாளை மற்றுமொரு எரிவாயு அடங்கிய கப்பல் இலங்கைக்கு

கடந்த 24 மணி நேரத்தில் 639 பேர் கைது