உள்நாடு

நாட்டில் அதிகரித்துவரும் நீர் வெறுப்பு நோய் மரணங்கள்!

(UTV | கொழும்பு) –

கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து நீர் வெறுப்பு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நீர் வெறுப்பு நோய் குறுத்த அறியாமையே மரணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் நீர் வெறுப்பு நோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் ஹேஷான் குருகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக நாய்கள் அல்லாத விலங்குகளால் கூட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்யும் போது, ​​நீர் வெறுப்பு நோயிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்துள்ளது. சில சமயங்களில் அந்த மிருகம் எதுவென என்று கூட தெரிந்து கொள்ள முடியாதுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர், வீதி ஓரங்களில் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் உறங்கி விட்டு காலையில் எழுந்தது பார்த்தால் ஏதேனும் விலங்குகள் கடித்திருக்கும். அவர்கள் அவற்றை கணக்கெடுப்பதில்லை. பின்னர் சிறிது காலம் கழித்து, அவர்களுக்கு நீர் வெறுப்பு நோயிக்கான அறிகுறிகள் தோன்றும். கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏதேனும் விலங்கு கடித்தால் அல்லது கீறினால் முறையான முதலுதவி அளிக்கப்பட வேண்டும். காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். வீட்டில் ஆல்கஹால், பெடாடின், அயோடின் கரைசல், செஜிகல் ஸ்பிரிட் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற கிருமி நாசினிகள் இருந்தால், அவற்றை பயன்படுத்தலாம். பின்னர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இவற்றை செய்தால் இலங்கையில் இருந்து நீர் வெறுப்பு நோயை ஒழிக்க முடியும் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

நாட்டில் தேயிலை உற்பத்தி சதவீதத்தில் வீழ்ச்சி!

ஜூன் 06 – 08ம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலமும் 15 நிமிடங்கள் மின்வெட்டு