வகைப்படுத்தப்படாத

அமைச்சு மாற்றம் இடம்பெற்றால் ஐ.தே.க.யின் பிரபல 3 அமைச்சர்கள் வெளியே?

(UDHAYAM, COLOMBO) – அமைச்சர்கள் மாற்றமொன்று இடம்பெற்று அதில், தான் தற்பொழுது வகிக்கும் அமைச்சுப் பதவி மாற்றம் செய்யப்பட்டால், தன்னுடைய அமைச்சிலிருந்தும், தான் வகித்துவரும் சகல பொறுப்புக்களிலிருந்தும் விலகி விடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்கள் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அவசர அமைச்சு மாற்றத்துக்கு தம்முடைய எதிர்ப்பை சிறிக்கொத்த தலைமையகத்தக்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். பிரதமரின் சீன விஜயத்தின் பின்னர் தமது தீர்மானம் குறித்து பேசவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சியின் ஒரு சூழ்ச்சிகர நடவடிக்கையாகவே இந்த அமைச்சு மாற்றம் இடம்பெறவுள்ளதாக காலி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் இடம்பெற்றால், பாரிய நெருக்கடியை கட்சி சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்

Sudan suspends schools after student killings