உள்நாடு

மேலும் பல பயனாளிகளுக்கு அஸ்வெசும திட்டம் – ஷெஹான் சேமசிங்க.

(UTV | கொழும்பு) –

அஸ்வெசும பயனாளர்களில் உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 113,713 பேருக்கு ஜூலை மாதத்திற்கான 709.5 மில்லியன் ரூபா பணம் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் அந்த பணத்தினை வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தனது x கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 1,162,245 பயனாளி குடும்பங்களுக்கு ஜூலை மாதத்துக்காக இதுவரை 7,278 மில்லியன் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆராய்வு நடவடிக்கை நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்கும் பணம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அந்த குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யுகதனவி ஒப்பந்தம் : சட்டமா அதிபரின் கோரிக்கை

மேலும் 246 பேருக்கு கொரோனா

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி