(UTV | கொழும்பு) –
பயிற்சிக்காக சேர்க்கப்படும் சிறப்பு விசேட வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பயிற்சிக்கு சென்ற வைத்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்தபின்னர் விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“விசேட வைத்திய நிபுணராக பயிற்சி பெறுவதற்கு சுமார் 5 ஆண்டுகள் ஆகும். எனவே அடுத்த 5 ஆண்டுகளில், இந்த பிரச்சனை நிச்சயமாக தீர்க்கப்படும், ஏனெனில் ஆட்சேர்ப்பு எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. சுமார் 600 மருத்துவர்கள் பயிற்சி பெற வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் வரமாட்டார்கள். ஆனால் அவர்களில் 50% வந்தாலும் அவர்களுடன் சேர்ந்து இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்கும். அவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் வரவுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්