உள்நாடு

நிதிக்குழு என்பது அரசின் தாளத்துக்கு ஆடும் குழுவா – சஜித் பிரேமதாச.

(UTV | கொழும்பு) –

அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகள் மற்றும் சட்டப்பத்திர ஆணைகளில் முறையற்ற வகையில் தலையிட எதிர்க்கட்சி தயாரில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதிக் குழுவானது,ஆய்வுகள்,அவதானிப்புகள், தரவுகளைத் தேடுதல் மற்றும் தரவுகளை மையமாகக் கொண்ட அறிவியல் பகுப்பாய்வை மேற்கொள்ளும் ஒரு குழுவா?அல்லது “அரசாங்கம்” மற்றும் “ஜனாதிபதி” கூறும் வார்த்தைக்கு ஆடும் குழுவா? என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வங்குரோத்து நிலையில் இருந்து மீள முயற்சிக்கும் நாடு என்ற வகையில்,நிதிக் குழு என்பது ஒருவருக்கொருவர் கூறும் தாளத்துக்கு ஆடும் குழுவாக இருக்க முடியாது என்றும்,நிதிக் குழுவின் தலைவர் பதவி கல்வி கற்ற புத்திசாலியான கலாநிதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

செயற்பாடுகளை ஆராய நிதி பற்றிய தெரிவுக் குழுவிற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் படகு சேவை

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையிலான மாநாடு இன்று

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு