உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு, அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மன்றில் சமுகமளிக்காத செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு மன்று பிடியாணை பிறப்பித்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொக்சிங்யில் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் வெற்றி!

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவித்தல்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இலங்கையர்