(UTV | கொழும்பு) –
போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நுவரெலியாவில் வைத்து இளைஞனும் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலியான ஆவணங்கள் பலவற்றை தயாரித்துக்கொண்டு ஒரு ஜோடி காரொன்றில் நுவரெலியா நகரத்துக்கு வருகைதருவவதாக, ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பிரகாரம் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்துகிடமான காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பயணித்த இருவரையும் இறக்கி விசாரணைக்கு உட்படுத்தினர்.
அப்போது போலியாக தயாரிக்கப்பட்ட வாகன பதிவு சான்றிதழ்-03, வருமான வரி ஆவணம்-03, காப்புறுதி சான்றிதழ்-03, நிதி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தவணைக்கட்டணம் கட்டி முடிக்கப்பட்டமைக்கான ஆவணம்-03, வாகனத்தை ஒப்படைப்பதற்கு எவ்விதமான எதிர்ப்பு இல்லையென அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள்-03, வாகன இலக்க தகடு இல்லையென பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான 3 பிரதிகள், தேசிய அடையாள அட்டைகள்-03, தற்காலிக வாகன அத்தாட்சி பத்திரம் ஆகியனவும் வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 27 வயதான இளைஞன், நாகுளுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 21 வயதான யுவதி, ஹிகுரான்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விருவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், முச்சக்கரவண்டி பதிவு புத்தகத்தை தயாரித்து தருவதாக கூறி பேராதனை பொலிஸ் பிரிவில் வசிக்கும் நபர் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්