(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்அது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடாத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர் . அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்;டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம்கட்டப்போகின்றனர் இந்தியாவின் கருத்திற்கு அமைய கடந்தகாலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம்,அவை அனைத்தும் முட்டாள்தளமான கதைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாடு எப்போதும் சுதந்திரமான நாடாக காணப்பட்டுள்ளது, நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் இல்லை,இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களைகையாண்டுள்ளனர் ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேவேளை தாம் நாட்டின் நிலைமை குறித்து நாங்கள் கவலையடைவதாகவும் , சுதந்திரத்தை பெற்ற நாங்கள் தற்போது அதனை இழக்கப்போகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්