வகைப்படுத்தப்படாத

புதுடில்லியில் இலங்கை இராணுவத்தின் வெசாக் பந்தல்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நிலவும் ஆன்மீக மற்றும் கலாச்சார உறவை மேம்படுத்தும் வகையில் புதுடில்லியில் முதல் தடவையாக வெசாக் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ பொறியியலாளர் சேவை படையணியினால் தயாரிக்கப்பட்ட இந்த வெசாக் பந்தலினை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சித்ராங்கணீ வாகீஸ்வரன் நேற்று திறந்துவைத்தார்.

புத்தபெருமானின் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த வெசாக் பந்தலினை அலங்கரிக்கும் வகையில் 200 வெசாக் விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தயாரிப்பதற்காக இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 இராணுவ வீரர்கள் கடந்த 2ம் திகதி இந்தியா சென்றதுடன், இலங்கை கடற்படையினரால் இதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது.

40 அடி உயரமான இந்த அலங்காரப்பந்தலில் அங்குலிமாலாவின் ஜாதக கதை காட்சிகள் ஹிந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெசாக் பந்தல் எதிர்வரும் 21ம் திகதி வரை மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.

Related posts

நாளை தவணை ஆரம்பம் !

அரச அளவையாளர்களின் போராட்டம் தொடர்ந்தும்?

තමා මේ රටේ ජනාධිපති ධුරයට පත්වූනේ ජනතාව ආරක්ෂා කිරීමටයි – ජනපති