(UDHAYAM, COLOMBO) – எதிர்காலத்தில் இனவாத அடிப்படையில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கந்துருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
‘ரஜரட நவோத்ய பிபிதெமு’ பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கந்துருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.