(UTV | கொழும்பு) – இஸ்ரோவால் (ISRO) அனுப்பப்பட்ட சந்திரயான் – 3 விண்கலம் 40 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தமைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் படி இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக குறித்த விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் திகதி (14.07.2023) விண்வெளிக்கு ஏவியது.
40 நாட்கள் பயணித்து நேற்று (23.08.2023) இந்திய நேரப்படி மாலை 05.47 மணியளவில் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியது சந்திரயான் -3.
இது தொடர்பாக கமலா ஹாரிஸ், தனது சமூக வலைதள பதிவில், ‘சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமையடைகின்றோம்’ என பதிவிட்டுள்ளார்.
அதேவேளை உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத பணிகளுக்காக பாராட்டை தெரிவித்து வருகின்றன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්