உலகம்உள்நாடு

இஸ்ரோ வெளியிட்ட புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என முன்னதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. இந்நிலையில், லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ’சந்திராயன்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

‘சைக்கிளில் பணிக்கு வாருங்கள்’ திட்டம் திங்களன்று