(UTV | கொழும்பு) –
பாடசாலைகளுக்குச் செல்லும் குறைந்த வயதுடைய பிள்ளைகள் கூட சிறு வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக களுத்துறை பொது வைத்தியசாலையின் இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர் பாத்திய ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை ஆகியவையே காரணம் என மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் சிறு வயதிலேயே மாரடைப்புக்கு முகங்கொடுக்கும் அபாயத்தை தவிர்க்க முடியும் என விசேட வைத்தியர் பாத்திய ரணசிங்க மேலும் தெரிவிக்கின்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්