உள்நாடு

குருந்தூர் மலை தொல்பொருட் திணைக்களத்திற்கானது – சியம்பலாகஸ்வெவ ஜனாதிபதிக்கு மகஜர்.

(UTV | கொழும்பு) –

குருந்தூர் மலை தொல் பொருட் திணைக்களத்திற்கானது. அதனை பௌத்த சமயத்தவர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் வழிபடும் சுதந்திரம் உண்டு. அதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தலைமையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார அவர்கள் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மகஜர் ஒன்று வழங்கப்பட்டது. குறித்த மகஜரை வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தலைமையில் தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தினர் இணைந்து (21.08) கையளித்தனர். குறித்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குருந்தூர் மலை உள்ளிட்ட தொல் பொருட் திணைக்களத்திற்குட்பட்ட பிரதேசங்களை தொல் பொருட் திணைக்களம் பாதுகாக்க வேண்டும். தொல் பொருட் திணைக்களத்தின் பிரதேசங்களை பௌத்த சமயம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. தொல்பொருட் திணைக்களம் இந்த நாட்டிற்கானது. அது அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையை தரும் விதமாக செயற்பட வேண்டும். தொல் பொருட் பிரதேசங்களிற்கு செல்வதற்கும், வழிபடுவதற்கும் பௌத்த சமயத்திற்கு மட்டும் அனுமதி வழங்காது இந்த நாட்டில் வாழும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கும் வழிபடுவதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ.முகுந்தன்சர்மா உட்பட சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த மக்கள் ஒன்றிய பிரதிநதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேல் மாகாணத்தில் 993 பேர் கைது

மொட்டு வேட்பாளராக தம்பிக்க: ஆனால் 10 நிபந்தனைகள்

யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி