உள்நாடுசூடான செய்திகள் 1

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

சுகாதார அமைச்சின் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைப் பணிப்பாளருமான மருத்துவர் ஜீ. விஜேசூரியவுக்கு எதிராக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவரது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் அரசாங்க மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி வரை சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தெற்கு அதிவேக வீதியில் கடுவலை – பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மூடப்படுகிறது

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

மனித உரிமை ஆணையாளருக்கு விபரங்களை அனுப்பிவைத்தார் ஆசாத் மௌலானா!