(UTV | கொழும்பு) –
தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரையான மலையகம் -200 நடைப்பயணம் நேற்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிறைவுபெற்றது.இதன்போது குறித்த நடைபயணத்தில் ஆரம்பம் முதல் கலந்துகொண்ட அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு மலையகம்-200 நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வையொட்டி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
”மலையகத் தமிழர்கள் ஏனைய சமூகங்களுடன் சமத்துவ குடிமக்களாக மாறுவதற்கான போராட்டத்தை நினைவுகூரும் 2 வார நடைப்பயணம் நிறைவடைந்த நிலையில், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை இலங்கையின் மலையகத் தோட்டப் பகுதிகளுக்கு வருகை தந்ததன் 200 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பேரணியாகச் சென்றுள்ளனர்” என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්