உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு -மக்களுக்கு வேண்டுகோள் !

(UTV | கொழும்பு) –

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குழாய் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.வரட்சியான காலநிலை காரணமாக மக்களின் சராசரி நீர் நுகர்வு வெகுவாக அதிகரித்துள்ளதுள்ளதாகவும்
போதியவு மழை பெய்யாததால் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.எனவே, போதியளவு நீர் இன்மையால் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் குறைவடையும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாகனங்களை கழுவுதல், தோட்டங்களுக்கு நீரை பாய்ச்சுதல், நீச்சல் குளம் பராமரிப்பு போன்ற பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் போது உயரமான பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நீரை சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.நீரேந்தும் பகுதிகளில் மழை பெய்தால் நிலைமை மாற்றமடையும். சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நாளை முதல் சட்டப்படி வேலையில்