உள்நாடு

ஶ்ரீ ரங்காவை 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு!

(UTV | கொழும்பு) –

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து வழக்கு ஒன்றின் சாட்சியாளரை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, கடந்த மார்ச் 17 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஜேஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டிருந்தார்.

சாட்சியத்தை அச்சுறுத்திய சம்பவம் மற்றும் விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகாத சம்பவத்தை அடுத்தே உயர்நீதிமன்றம் ஜே. ஸ்ரீ ரங்காவை கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,794 பேர் கைது

மியன்மார் அகதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்தார் – வீடியோ

editor

எரிபொருள் விலைகளில் மாற்றம்

editor