(UTV | கொழும்பு) – விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990ம் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி எனப்பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன், கறுப்பு ஆகஸ்ட் 11 என்ற தொனியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏறாவூர், காத்தான்குடிப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட எமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு கூறுகின்றோம். ஐநா மனித உரிமைகள் பேரவை புலிகளுக்கு ஆதரவான அனைத்து நியாயங்களையும் கண்டிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளில் நியாயப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.
ஐநா மனித உரிமைகள் பேரவை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் பாராபட்சமின்றி இருங்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், ஒலுவில், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
பாறுக் ஷிஹான்
!
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්