உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்?

(UTV | கொழும்பு) –

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவிவரும் வறட்சி நிலைமை காரணமாக விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி மக்களை அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறக்கி மீண்டும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரகசிய அறிக்கையொன்றை வழங்கியுள்ளனர் என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த போராட்டத்தின்போது செயற்பட்ட சிலர் இந்த சூழ்ச்சி திட்டத்தின் பின்னணியில் இயங்கி வருவதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பது இந்த தரப்பின் பிரதான நோக்கம் என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த சூழ்ச்சி திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றிய முழுமையான விபரங்களை அறிக்கை இட்டுள்ளனர். மேலும் சில ஊடக நிறுவனங்களும் இந்த சூழ்ச்சி திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையில் இந்த ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி, எதிர்க்கட்சியில் அங்கம் வைக்கும் தமிழ் கட்சி பிரதிநிதி ஒருவர் இந்த சூழ்ச்சி திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamilwin

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழை

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ : நீட்டித்த அதிவிசேட வர்த்தமானி