(UTV | கொழும்பு) –
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என வர்த்தகமற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தினால் இது தொடர்பான கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 100,000 முட்டைகளை உற்பத்தி செய்யும் நான்கு வர்த்தகர்கள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் தொழில்துறை பெரிதும் பாதிப்பதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், முன்னர் சுமார் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கோழி இறைச்சி தற்போது 950 ரூபாவாக அதிகரித்துள்ளதால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான கோழி பண்ணையாளர்கள் தொழிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්