உள்நாடு

ஹம்தியின் ஜனாஸா இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை! நடப்பது என்ன?

(UTV | கொழும்பு) –

கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனயீனத்தால் 2 சிறுநீரகங்களையும் இழந்த நிலையில், உயிரிழந்த  பாலகன் முஹம்மத் ஹம்தியின் ஜனாஸா இன்று 30 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் முற்பகல 11.35 மணிவரை நல்லடக்கம் செய்யப்படவில்லை. என தெரியவருகிறது

ஜனாஸா ஹம்தியின் பெற்றோர்களிடம் இதுவரை கையளிக்கப்படாத நிலையில் அதுதொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

ஹம்தியின் பெற்றோர்களிடம் பொலிஸார், நேற்று சனிக்கிழமையும் (29) விரிவான விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ஆம் திகதி, வியாழக்கிழமை ஹம்தி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சிறுவனுக்கு நடந்த அநீதிக்கு நீதி கிட்டுமா? அரசியவாதிகள் களமிறங்குவார்களா?

(ஜமு)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

இன்று முதல் அமுலாகும் நாடாளாவிய ரீதியிலான பயணக்கட்டுப்பாடு

மூன்று ஜப்பான் போர் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன