உள்நாடுசூடான செய்திகள் 1

மட்டக்களப்பில் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் : 11 பஸ்கள் வலைவீச்சு

(UTV | கொழும்பு) –

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி இரவில் பிரயாணிக்கும் 11 பேருந்துகளை கண்டறியும் விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (18) இரவு மட்டக்களப்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மற்றும் மாவட்டத்துக்குள் நுழையும் பேருந்துகளை நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டு. மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் உயத்.என்.பி. லியனகேயின் ஆலோசனைக்கமைய மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சரத் சந்திரா தலைமையிலான போக்குவரத்து பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று (18) இரவு மட்டக்களப்பு கொழும்பு வீதியிலுள்ள பிள்ளையாரடி பகுதி வீதியில் மட்டக்களப்பு மற்றும் எனைய பிரதேசங்களில் இருந்து கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்துகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த விசேட சோதனை நடவடிக்கை இரவு 11 மணி வரை முன்னெடுத்தனர் இதன் போது போக்குவரத்து அனுமதி பத்திரம் சாரதி அனுமதி பத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்களையும் சோதனையிட்டு பதிவேட்டில் பதிந்ததுடன் வீதி போக்குவரத்தை மீறி பிரயாணித்த பேருந்துகளை எச்சரித்து அனுப்பியதுடன் எந்த விதமான ஆவணங்களும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய மோட்டர் சைக்கிள் ஒன்றை கைப்பறியுள்ளனர்.

இதேவேளை அம்பாறை அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, கல்முனை, நிந்தவூர், களுவாஞ்சிக்குடி, கத்தான்குடி உட்பட பல பிரதேசங்களில் இருந்து போக்குவரத்து அனுமதி பத்திரமின்றி கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இரவு வேளைகளில் போக்குவரத்து சேவையில் சுமார் 11 பேருந்துகள் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,

இந்த சட்டவிரோத போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளை கண்டறிந்து அவைகளை கைப்பற்றி நீதிமன்றல் வழக்கு தொடர்வதற்காக இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கை தொடர்ந்து இரவு வேளைகளில் இடம் பெறும் என மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள் 

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்