உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

(UTV | கொழும்பு) –

உயிரிழப்பு  விபத்துக்களில் விபத்திற்குள்ளாகும் வாகனங்களின் சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இவ்வாறு விளக்கமளித்தார்.

“தற்போது, ​​சாரதிகள் மது மட்டுமின்றி, விஷ போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். வரும் காலங்களில், இது குறித்து அடையாளம் கணுவதற்காக தேவையான உபகரணங்களை கொண்டுவந்து, மது, போதைப்பொருள் சோதனைகள் தொடங்கப்படும். குறிப்பாக இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு, உரிய பரிசோதனைகள் செய்யப்படும். எதிர்காலத்தில், குறிப்பாக வீதி விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதி, விஷ போதைப்பொருட்களை உட்கொண்டாரா என, மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்படுவார். இது குறித்து தற்போது கலந்துரையாடப்படுகிறது என்றார்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் 137 பேரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி வரை 1,135 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தவிர, விபத்துக்களால் 2,088  பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன், 4,450 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் இருந்து மேலும் 300 மில்லியன் யுவான் மானியம்

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது