(UTV | கொழும்பு) –
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக முன்னிலையாகியுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் புதிய தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னிலையான பல வேட்பாளர்களது தொழில் தற்போது கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், இந்த விடயம் தொடர்பில் புதிய தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.
VIDEO : https://youtu.be/LicGqZymUF8
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්