உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

(UTV | கொழும்பு) –    முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையினால் தற்காலிகமாக நீக்கப்பட்ட உறுப்பினர்களையும் கட்சியின் மத்திய குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் கட்சியின் நன்மைக்காக என்ன செய்தாலும் அதற்கு ஆதரவளிப்போம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.  இதேவேளை, பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களை மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் மொட்டுக் கட்சியிலே உள்ளனர்”

தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகத்தில் தடை

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயதாச ராஜபக்ச.