(UTV | கொழும்பு) – இலங்கையிலுள்ள உலமாக்கள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களை பள்ளிவாயல்களின் இமாம்களாக்கும் புதிய திட்டமொன்றை ஸம்ஸம் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அதன் தலைவர் யூஸுப் முப்தி தெரிவித்துள்ளார்.
UTVக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“எமது உலமாக்கள் ஏன் பேசுகின்றார்கள், ஏன் ஊடகங்களில் பேசுகின்றார்கள் என்ற கேள்வி மாற்றுமத சமூகத்திலிருந்து எழுகிறது. இவற்றையெல்லாம் கருத்திற்குக்கொண்டு நாம் இந்த வி.ஐ.பி என்ற 06 மாத கால இமாம்களுக்கான பயிற்ச்சி திட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானித்து இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று விசேட பாடத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.”
மிக விரைவில் இன்னும் சில நாடுகளுக்குச் சென்று இது தொடர்பில் விரிவாக ஆராய்யவுள்ளோம் அங்குள்ள இஸ்லாமிய அமைப்புக்களை சந்திக்கவுள்ளோம். உலகலாளவியரீதியிலுள்ள பல்கலைக்கழக உலமாக்களை சந்தித்து பாடத்திட்டங்களை உருவாக்கவுள்ளோம்.
துருக்கி நாட்டில் இமாம்களை தெரிவு செய்வதற்கென தனியாக தகுதிகள் உள்ளன அது போல் உருவாக்கப்பட வேண்டும். 1052ஆம் ஆண்டு முதல் கிறிஸ்தவ மதம் இது போல் தான் பயிற்றுபெறப்பட்டவர்களை அனுப்பிவைக்கின்றனர். பெளத்த மதகுருக்களுக்கு தனி பல்கலைக்கழக உள்ளது.
பள்ளிவாயலின் இமாம்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். அவர்களுக்கான தேவையை எமது சமூகம் செய்துகொடுப்பதில்லை
ஆகவே, இமாம்களுக்கு தேவையான பயிற்சிகளை கட்டாயம் வழங்க வேண்டும். அதுபோல் பள்ளிவாயல்களுக்கான நிருவாகத்தினருக்கும் எந்த பயிற்சியும் இல்லை அத்துடன் மத்ரசாக்களுக்கான நிருவாகிகளும், ஆசிரியர்களுக்குமான பயிற்சியை கட்டாயம் வழங்க வேண்டும். கீழ் உள்ள முழு வீடியோவை பார்ப்பதன் மூலம் இதன் பூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්