(UTV | கொழும்பு) –
இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டுச் சபையும் இன்று (14) கைச்சாத்திட்டுள்ளன.
எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனையை உள்ளடக்கிய திட்டத்தில் சினோபெக் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. தற்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் பராமரிக்கப்படும் 150 தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும், 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் இலக்கம் 17இன் படி, சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் 20 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்பந்தத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சினோபெக் நிறுவனத்தினால் 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல், 500 PPM டீசல் உள்ளிட்ட பல்வேறு பெற்றோலிய பொருட்களை விற்பனை செய்யவுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්