(UTV | கொழும்பு) –
2023 ஹஜ் கடமைக்காக சவூதிக்கு சென்றிருந்த மற்றொரு இலங்கை யாத்திரிகர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மக்காவில் அவர் தங்கி இருந்த அறையிலேயே காலமானார்.
வாரிய பொலஇஹேனேகெதரயைச் சேர்ந்த சேர்ந்த ஏ.பி. உம்மு மர்ழியா (67) என்பவர் குருநாகல் அமீன் ட்ரவல்ஸ் மூலம் ஹஜ் கடமைக்காக சென்று கடமைகள் அனைத்தையும் நிறைவு செய்திருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் மரணமானர். இவர் நாளைய தினம் நாடு திரும்புவதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் சுகயீனம் ஏற்பட்டு மலிக் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து தேறி மீண்டும் தனது அறைக்கு வந்து தங்கியிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.
இவரது ஜனாஸா தொழுகை நேற்று மாலை ஹரம் ஷரீபில் நடத்தப்பட்டு மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக ஹஜ் வழிகாட்டியாக சென்றுள்ள மௌலவி எஸ்.ஐ.எம்.ஹபீல் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திக்கு:
VV
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්