(UTV | கொழும்பு) –
பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதமான தென பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றஞ்சுமத்தியுள்ளார். கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்கும்போது அரசியலமைப்புப் பேரவையின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால், அவ்வாறானதொரு நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஆதலால், பொலிஸ் மா அதிபரின் நியமனம் சட்டத்துக்கு விரோதமானதாகும். நாட்டில் இப்போது பொலிஸ் மா அதிபர் என்று எவரும் கிடையாது.
பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. எனினும், இதுவரை பொருத்தமான ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்துவதற்கு அரசாங்கத்தால் முடியவில்லை. சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் மா அதிபராகக்கொண்டு இயங்கும் பொலிஸார், சாதாரண பொதுமக்களுக்கு நியாயத்தை எவ்வாறு நிலைநாட்டுவார்கள் என நாம் அரசாங்கத்திடம் கேட்கிறோம் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්