உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!

(UTV | கொழும்பு) –

இந்நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்நாட்டில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் 105,000 பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிறுவனங்களிலிருந்து 82% வரி வருமானம் 328 நிறுவனங்களிலிருந்தே கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது அடைந்திருக்க வேண்டிய விடயங்களான நாட்டின் பணவீக்கம், நாட்டின் கையிருப்பு அளவு மற்றும் அரசாங்க வருமானம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு இடம்பெறும் டிசம்பர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் இதன்போது  வலியுறுத்தினார்.

அதனால் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றுடன்  தனது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்த வரி வருமானங்களை சேர்ப்பதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு முடியாமல் போயுள்ளமை தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், வரி வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குழு என்ற வகையில் அதில் சாதகமான தலையீட்டை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ விமலவீர திசநாயக்க, கௌரவ இரான் விக்ரமரத்ன, கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ குணதிலக ராஜபக்ஷ, கௌரவ தம்மிக்க பெரேரா ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ உதயன கிரிந்திகொட, கௌரவ கருணாதாச கொடிதுவக்கு, கௌரவ மதுர விதானகே, கௌரவ மொஹமட் முஸம்மில் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்