உள்நாடுசூடான செய்திகள் 1

அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : ஜிஹாத், சாகிர் நாயக், அளுத்கம, திகன உட்பட பல விடயங்கள் தொடர்பில் சாட்சியம்

(UTV | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வரு­டங்­களின் பின்னர், ‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்டார். பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக அவர் மீது குற்றம்சுமத்­தப்­பட்­டது. அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்கு மேலும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர், அஹ்னாப் ஜஸீம் மாண­வர்­க­ளுக்கு புலி­களின் தலைவர் பிர­பா­கரன், நளீமியா கலா­பீ­டத்தின் அஷ்ஷெய்க் அகார் முஹம்­மது ஆகி­யோரின் உரை­களைக் காட்டி, அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக முன் வைத்த குற்­றச்­சாட்­டுக்கள், இது­வ­ரை­யி­லான சாட்­சி­யங்கள் ஊடாக பொய்­யா­னவை என தெரிய வந்­தி­ருந்த நிலையில், விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த பயங்­க­ர­வாத விசா­ரணை பிரி­வினர் சாட்­சி­யா­ளர்கள் சொல்­லா­ததை எல்லாம் வாக்கு மூலங்­க­ளாக பதிவு செய்து, அஹ்­னா­புக்கு எதி­ராக பயன்­ப­டுத்­தி­யுள்­ளமை மன்றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அஹ்னாப் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக நிரூ­பிக்க, வழக்குத் தொடுநர் தரப்பு அல்­லது அரச தரப்பு நீதி­மன்றம் முன்­னி­லையில் கொண்­டு­வந்த முதல் இரண்டு சாட்­சி­யங்­களும் அரச தரப்பு எதிர்­பார்க்­காத நிலைப்­பாட்­டினை மன்றில் வெளிப்­ப­டுத்தி, கவிஞர் அஹ்னாப் ஜஸீம் அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு அற்­றவர் என மன்றில் உண்­மை­களை புட்டு புட்டு வைத்­துள்ள நிலையில், 3 ஆவது சாட்­சி­யா­ள­ராக மாணவன் ஒரு­வரின் சாட்­சியம் கடந்த வாரம் (ஜூன் 28) பதிவு செய்­யப்­பட்­டது.
புத்­தளம் மேல் நீதி­மன்றில் நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் இந்த சாட்சி விசா­ரணை நடாத்­தப்­பட்­டது.

இதன்­போது சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த, இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீமும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

வழக்கின் அனைத்து விட­யங்­களும் நீதி­மன்ற மொழி பெயர்ப்­பாளர் ஊடாக குற்றம் சாட்­டப்­பட்ட அஹ்னாப் ஜஸீ­முக்கு, நீதி­ப­தியின் உத்­த­ரவின் பேரில் தமிழில் மொழி பெயர்க்­கப்­பட்­டது.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­துள்­ளது.

இந்த வழக்கு இறு­தி­யாக கடந்த ஜூன் 28 ஆம் திகதி புத­னன்று விசா­ர­ணைக்கு வந்­த­போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக்க மன்றில் ஆஜ­ரானார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீ­முக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான சஞ்சய் வில்சன் ஜய­சே­கர, ஹுஸ்னி ராஜித் ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரானார்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. புத்­தளம் -மது­ரங்­குளி பகு­தியில் உள்ள எக்­ஸ­லென்ஸி எனும் பெயரை உடைய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வாத கொள்­கை­களை ஊட்டி இன, மத, முரண்­பா­டுகள் மற்றும் பகை உணர்­வினை தூண்­டி­ய­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஒரே ஒரு குற்­றச்­சாட்டே சுமத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தான் நிர­ப­ராதி (சுற்­ற­வாளி) என அஹ்னாப் ஜஸீம் அறி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே சாட்சி விசா­ர­ணைகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
இதற்கு முன்னர் புத்­தளம், ஸ்கூல் ஒப் எக்­ச­லன்ஸி எனும் ஆங்­கில மொழி மூல பாட­சா­லையின் அதிபர் ஹிதா­ய­துல்லாஹ் அஜ்மல் , அப்­பா­ட­சா­லையில் கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ. த. சாதா­ரண தர பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வ­னான தற்­போது 21 வய­து­டைய அபூ தாஹிர் மொஹம்மட் அசிராஜ் எனும் இளைஞன் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளித்து முடித்­தி­ருந்­தனர்.

இந்த பின்­ன­ணி­யு­ட­னேயே கடந்த ஜூன் 28 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது மொஹம்மட் பெளஸி மொஹம்மட் பசாரத் எனும் 21 வயது இளை­ஞனின் சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது.

சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் நெறிப்­ப­டுத்­தலில் இந்த சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது.

சாட்­சியம் நெறிப்­ப­டுத்­தப்­படும் போது, அரச சட்­ட­வாதி, இந்­தி­யாவின் கர்­நா­டகா மாநி­லத்தில் பதி­வான ஹிஜாப் பிரச்­சினை, சர்­வ­தேச அளவில் இஸ்­லா­மிய மத போத­க­ராக அறி­யப்­படும் சாகிர் நாயக்கை மையப்­ப­டுத்­தியும் கேள்­வி­களை தொடுத்து சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இத­னை­விட அளுத்­கம, திகன வன்­மு­றைகள் தொடர்­பிலும் கேள்­விகள் தொடுக்­கப்­பட்­டன. முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் இந்­தியா போன்ற நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பிரச்­சினை உள்­ளது என்­ப­தற்கு உதா­ர­ண­மாக கர்­நா­டகா மாநி­லத்தில் பதி­வான ஹிஜாப் பிரச்­சி­னை­யையும், பிர­தி­வாதி அடிப்­ப­டை­வாத உரை­களை இணையம் ஊடாக காண்­பித்­தாரா என்­ப­தற்கு உதா­ர­ண­மாக சாகிர் நாயக்கின் பெய­ரையும் அரச சட்­ட­வாதி பயன்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

கே: அஹ்னாப் சேர் அவர் எழு­திய புத்­த­கங்கள் தொடர்பில் கூறி­யி­ருக்­கின்­றாரா?
ப: ஆம்
கே: அது என்ன புத்­தகம்?
ப: கவிதை புத்­தகம்
கே: புத்­த­கத்தின் பெயர் என்ன?
ப: நவ­ரசம்
கே: அதனை வாசித்­துள்­ளீரா ?
ப: நான் முழு­மை­யாக வாசிக்­க­வில்லை. ஓரிரு கவி­தைகள் வாசித்­துள்ளேன்.
கே: விடு­தியில் தொலைக்­காட்சி இருந்­ததா?
ப: இல்லை.
கே:உங்­க­ளிடம் நவீன கைய­டக்கத் தொலை­பேசி இருந்­ததா?
ப: அப்­போது இருக்­க­வில்லை.
கே: அஹ்னாப் சேரிடம் இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்கள் இருந்­த­னவா?
ப: ஆம், மடிக்­க­ணினி, தொலை­பேசி இருந்­தன.
கே: அஹ்னாப் சேருடன் நீங்கள் கதைக்கும் போது அவர் உங்­க­ளுக்கு காணொ­ளிகள் காண்­பிப்­பாரா?
ப: ஆம்
கே: அந்த காணொ­ளி­களில் பிர­சார உரைகள் இருந்­த­னவா? அதா­வது சாகிர் நாயக் போன்­ற­வர்­களின் உரை­களை காண்­பித்­துள்­ளாரா?
ப: ஆம்
கே: வேறு யாரின் உரை­களை காண்­பித்­துள்ளார்?
ப: பாடங்­க­ளுடன் தொடர்­பு­டைய விட­யங்­களை காண்­பித்து விளக்­குவார். பிரச்­சா­ர­கர்கள் பெயர் தெரி­யாது.
கே: உலகில் நடக்கும் விட­யங்கள் தொடர்பில் யூ ரியூப்பில் காணொ­ளி­களை காட்­டு­வாரா?
ப: இல்லை
கே; 2019 இல் சிரியா, ஈராக்கில் பிரச்­சினை நடந்­தது தெரி­யுமா ?
ப: ஆம்
கே: அந்த நாடு­களில் மோதல்­களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏற்­ப­டுத்­தி­யது அல்­லவே?
ப: அதன் உரு­வாக்கம் தொடர்பில் எனக்கு தெரி­யாது.
கே: அந்த போரினால் முஸ்­லிம்­க­ளுக்கு கடும் அழிவு அந்த நாடு­களில் ஏற்­பட்­டதை அறி­வீரா ?
ப: போர் நடந்­தது தெரியும். அழி­வுகள் தொடர்பில் தெரி­யாது.
கே: அந்த போர் காட்­சி­களை அஹ்னாப் சேரின் மடிக்­க­ணி­னியில் பார்த்­தீரா?
ப: இல்லை.
கே: முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் நடப்­பது குறித்து தெரி­யுமா ?
ப: தெரி­யாது.
கே: இந்­தி­யாவில் ஹிந்து – முஸ்லிம் பிரச்­சினை உள்­ளமை தெரி­யுமா ?
ப: அவ்­வ­ள­வாக தெரி­யாது.
கே: இந்­தி­யாவில் முஸ்லிம் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து கல்­லூ­ரிக்கு சென்­றதால் ஏற்­பட்ட பிரச்­சினை தெரி­யுமா?
ப: ஆம்.
கே: எதற்­காக ஹிஜாப் அணிந்­த­மையை ஹிந்துக் குழு எதிர்த்­தது?
ப: அது குறித்து தெரி­யாது.
கே: இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடந்­தது தெரி­யுமா?
பதில் : ஆம்.
கே: எவ்­வா­றான வன்­மு­றைகள் அல்­லது பிரச்­சி­னைகள் நடந்­தன ?
பதில் : பெண்கள் முகத்தை மூடு­வ­தற்கு எதி­ராக …..
கே: அது உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் நடந்­தது…அதற்கு முன்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடந்த பிரச்­சி­னைகள் தொடர்­பி­லேயே நான் கேட்­கின்றேன்..?
ப: அதற்கு முன்னர் தெரி­யாது.
கே: அளுத்­­கம – தர்கா நகர் பிரச்­சினை தெரி­யுமா?
ப: தெரி­யாது
கே: கண்டி – திகன பிரச்­சினை தெரி­யுமா? சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களை தாக்­கி­னார்கள் என தெரி­யுமா?
ப: திகன பிரச்­சினை கேள்­விப்­பட்­டுள்ளேன்.. அவ்­வ­ள­வாக தெரி­யாது.
கே: அங்கு முஸ்­லிம்­களின் கடைகள், வீடுகள் உடைத்து எரிக்­கப்­பட்­டது தெரி­யுமா?
ப: தெரி­யாது.
கே: தர்கா நகரில் தேரர் ஒருவர் சென்று பிர­சாரம் செய்­த­மையால் முஸ்­லிம்கள் மீது வன்­முறை வெடித்­தது தெரி­யுமா?
ப: தெரி­யாது.
இதன்­போது நீதி­பதி சாட்­சி­யா­ளரை நோக்கி உங்கள் வயது என்ன? என கேள்வி எழுப்­பினார். சாட்­சி­யாளர் அதற்கு 21 என பதி­ல­ளித்தார்.

இதன்­போது பிர­தி­வாதி அஹ்னாப் சார்பில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தர்கா நகர் பிரச்­சி­னையின் போது சாட்­சி­யா­ள­ருக்கு வெறும் 10 வயது மட்­டுமே என்­பதை சுட்­டிக்­காட்­டி­ய­துடன் அதனை அறி­யாமல் இருக்க வாய்ப்பு உள்­ளது என்­பதை குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து சாட்­சியம் தொடர்ந்தும் பதிவு செய்­யப்­பட்­டது.

கே: அஹ்னாப் சேர் காணொ­ளி­களை காட்டி உங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிப்­பாரா?
ப: ஆம்… பாடங்­களில் சந்­தே­கங்­களை நாம் அவ­ரி­டமே கேட்போம். தமிழ், வர­லாறு போன்ற பாடங்கள் குறித்த சந்­தே­கங்­களை கேட்போம். அப்­போது அவர் மடிக்­க­னி­ணியில் வீடி­யோக்­க­ளையும் காட்டி விளக்­க­ம­ளிப்பார். முதலாம் உலகப் போர், 2 ஆம் உலகப் போர் தொடர்பில் அவர் அவ்­வாறு விளக்­க­ம­ளித்தார்.
கே: முப்தி மாலிக் என்ற ஒரு­வரின் உரையை பார்த்­துள்­ளீர்­களா?
ப: இல்லை.
கே: அந்த உரை­களை பார்த்­து­விட்டு, அதில் நீங்கள் அறிந்த இஸ்­லாத்­துக்கு மாற்­ற­மான விட­யங்கள் கூறப்­பட்டால் அஹ்னாப் சேரிடம் கலந்­து­ரை­யா­டு­வீர்­களா?
ப: ஆம்.
கே: ஜிஹாத் தொடர்பில் அவ்­வாறு பேசி­யுள்­ளீர்­களா?
ப: இல்லை.
கே: ஜிஹாத் என்றால் என்ன?
ப: இஸ்­லாத்தின் பாதையில் போரி­டு­வது
கே: முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான உல­க­ள­வி­லான வன்­மு­றைகள் தொடர்பில் எடுக்க முடி­யு­மான எதிர் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­ப­டுமா?
ப: அப்­படி ஒன்றும் நடக்­க­வில்லை.
கே: முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் கேள்­விப்­ப­டும்­போது உங்கள் உணர்வு எப்­படி இருக்கும் ?
ப: கவ­லைப்­ப­டுவோம். அவ்­வ­ளவு தான்…என சாட்­சி­ய­ம­ளித்தார்

எவ்­வா­றா­யினும் பிர­தி­வா­தியின் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் குறுக்கு விசா­ரணை செய்யும் போது, சாட்­சி­யாளர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­களின் போது சாகிர் நாயக் தொடர்பில் எத­னையும் கூறி­யி­ருக்­க­வில்லை என்­பதை அவ­ரது வாக்கு மூலத்தின் மூலப் பிரதி கொண்டு மன்­றுக்கு நிரூ­பித்தார்.
அத்­துடன் சாகிர் நாயக்கின் உரை­களை கேட்­ட­தாக வழங்­கப்­பட்ட சாட்­சியம் தொடர்­பிலும் குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­ட­துடன், சாகிர் நாயக்கின் உரைகள் ஒன்றும் தவ­றா­னது அல்ல என்­பதை சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் மன்றில் பதிவு செய்தார்.
இதன்­போது சட்­டத்­த­ரணி ருஷ்தி, சாட்­சி­யா­ள­ரிடம் ஜிஹாத் தொடர்பில் குறுக்கு விசா­ரணை செய்தார்.

கே: ஜிஹாத் தொடர்பில் எப்­போது அறிந்­து ­கொண்டீர்?விடு­தியில் இருக்­கும்­போதா? அதன் பின்­னரா?
ப: விடு­தியில் இருக்­கும்­போது அல்ல. அதன் பின்­னரே அறிந்து கொண்டேன்.
கே: எப்­படி அறிந்தீர் ?
ப: வெள்ளிக்கிழமை பயான் ஊடாக அறிந்தேன்.
கே: எங்கு வைத்து அறிந்தீர் ?
ப: எமது ஊர் பள்ளிவாசல், தில்லையடி.
கே: அந்த பயான் ஊடாக எதிர்பார்க்கப்பட்டது என்ன?
ப: தெரியாது.
கே: அந்த பயானில் ஜிஹாத் செய்யுமாறு கூறினார்களா?
ப: இல்லை. இல்லை. ஜிஹாத் நபிமார்கள் செய்தது. நம் நல்ல செயல்கள் தான தர்மங்களை செய்தால் அந்த நன்மையைப் பெறலாம் என கூறினார்கள்.

அத்­துடன், குற்­றச்­சாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ‘ஏனைய மதத்­தி­ன­ருக்கு எதி­ராக பகை­மையை பிர­தி­வாதி தூண்­டினார் ‘ என்­பதை மையப்­ப­டுத்தி சாட்­சி­யாளர் பசா­ரத்­திடம் குறுக்கு விசா­ரணை சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீபால் செய்­யப்­பட்­டது. தனக்கு பிர­தி­வா­தியின் செயற்­பாடு ஊடாக எந்த பகை­மையும் ஏனைய மதத்­த­வர்கள் தொடர்பில் ஏற்­ப­ட­வில்லை எனவும், தான் சொல்­லாத விட­யத்தை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் தனது வாக்கு மூல­மாக பதிவு செய்­துள்­ள­தா­கவும் சாட்­சி­யாளர் குறிப்­பிட்டார். அதனை நீதி­மன்றம் பதிவு செய்து கொண்­டது.

இந்த விட­யத்தை பதிவு செய்த நீதி­மன்றம் இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்தி வைத்துள்ளது.

– Vidivelli

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

பாடசாலைகளை திறப்பதற்கான வழிகாட்டல்கள் சமர்ப்பிப்பு

அனைத்து பொருளாதாரம் மத்திய நிலையங்களுக்கும் விஷேட பாதுகாப்பு!