உலகம்

சிறையிலுள்ள கடாபியின் மகனின் நிலை கவலைக்கிடம்!

(UTV | கொழும்பு) –

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

இதனையடுத்து சிரியா-லெபனான் எல்லையில் பிடிபட்ட அவரது மகன் ஹன்னிவால் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் 2015 ஆம் ஆண்டு முதல் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரைஅளவு குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து ஹன்னிவாலை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கவலைக்கிடமாக உள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

இஸ்ரேல்-பலஸ்தீன் போரால் காசாவில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிகிறது!

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை