உள்நாடுசூடான செய்திகள் 1

குறைகிறது மின் கட்டணம் – ஆணைக்குழு ஒப்புதல்

(UTV | கொழும்பு) –

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.

ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும்.

மாதாந்திர கட்டணம் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்கு கீழ் உள்ள பிரிவில் ஒரு அலகுக்கான கட்டணம் 42 ரூபாயில் இருந்து 32 ரூபாவாகவும், மாத கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபாவாகவும் குறைக்கப்படும்.

91 முதல் 120 அலகுகளுக்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 35 ரூபாவாகவும், மாதாந்த கட்டணம் 1500 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாகவும் குறைக்கப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்கு 16 சதவீதம் கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த நுகர்வு கொண்ட மத ஸ்தலங்களுக்கு அலகிற்கு 10 ரூபாய். ( 30 ரூபாவிலுருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டது)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை