(UTV | கொழும்பு) –
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக ஆஜராகுமாறு அறிவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆா்ப்பாட்டகார்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது ஒரு கோடியே எழுபத்தெட்டு இலட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டமை தொடா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவா் சந்தேகநபராக பெயாிடப்பட்டிருந்தாா்.
அதற்கு எதிராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்தி ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவா், நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடம் பகுதியில் இடம்பெற்ற “கோதா கோ கிராமம்” போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் வெளியிட்ட கடிதத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வலுவற்றதாக்கி உத்தரவிட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්