(UTV | கொழும்பு) –
பொதுஜன பெரமுணவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான மஹிந்த கஹந்தகமகே விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்
கொழும்பு கொம்பனித்தெரு தொடர்மாடியில் அரசாங்க வீடொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்களித்து 70 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
இதனையடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அவரை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியலுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්