(UTV | கொழும்பு) – 32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கிரான் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
59 உரிமையாளர்களிடம் அவர்களின் காணிகள் இன்று கையளிக்கப்பட்டன.
இந்த காணிகளை 1991 ஆம் ஆண்டிலிருந்து இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්