அரசியல்உள்நாடு

திலினி வழக்கு : ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  திலினி பிரியமலி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

வாகனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலிவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த வழக்கு இன்றைய தினம் (05) கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(இதன் போது பிரதிவாதியான திலினி பிரியமாலி நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.)

 

அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தமது கட்சிக்காரர் நோய் நிலை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக மன்றில் அறிவித்துள்ளார்.

 

இதன்படி குறித்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையுடன் பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 

2010ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் வாகனம் ஒன்றை பெற்று தருவதாக கூறி, அவரிடம் 80 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு அதனை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது

நாட்டில் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!