உள்நாடு

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு

(UTV | கொழும்பு) –    புதிய தலைவராக பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 

பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பதவி ஏற்க சென்றிருந்த தர்ஷன சமரவிக்ரம என்பவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

 

பாதுக்கை, வல்பிட்ட, கெமுனு மாவத்தையில் இன்று காலை 7.35 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 62 வயதான நபர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த நபர் வீட்டிலிருந்து தனது மோட்டார் வாகனத்தில் பயணிக்க முற்பட்ட வேளை, மோட்டார் சைக்களில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

துப்பாக்கி பிரயோகத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர் இதற்கு முன்னர் கூட்டுறவு காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

TNAஐ மீண்டும் சந்திக்கும் ஜனாதிபதி ரணில்

அன்டிஜன் பரிசோதனை – 61 பேருக்கு கொரோனா உறுதி